NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிலி நாட்டில் அவசர நிலை பிரகடனம்!

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள சிலி நாட்டின் நுபல் மற்றும் மவுலி ஆகிய மாகாணங்களில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.

அதன்படி, இரு மாகாணங்களிலும் 15 இடங்களில் காட்டுத்தீ பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், காட்டுத்தீ காரணமாக நுபல், மவுலி ஆகிய 2 மாகாணங்களிலும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், காட்டுத்தீக்கு வழி ஏற்படுத்தியதாக கூறப்படும் 60 சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்புப்படையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles