இந்த ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் 5.3 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது.
4.8 சதவீதமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கணித்திருந்த நிலையில், அதையும் தாண்டியுள்ளது. கடந்த காலாண்டு வளர்ச்சியை காட்டிலும் 1.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
முந்தைய ஆண்டைவிட மார்ச் மாதத்தில் சீனாவில் ஏற்றுமதி 7.5 சதவீதமாக சரிந்துள்ளதாகவும், அதேவேளையில் இறக்குமதியும் குறைந்துள்ளதாகவும் சீனா தெரிவித்திருந்த நிலையில் இந்த சிறந்த தகவல் வெளியாகியுள்ளது.