NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சீனாவில் மீண்டும் பரவி வரும் புதிய காய்ச்சல்…!

சீனாவில் கடந்த சில நாட்களாக அறியப்படாத ஒரு புதிய வகை நிமோனியா காய்ச்சல் பரவி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பெய்ஜிங், லியோனிங் மற்றும் பல நகரங்களில் உள்ள குழந்தைகள் இந்த நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது.

வட சீனாவில் பரவி வரும் நிமோனியா காய்ச்சல் பற்றிய அனைத்து தகவல்களையும் வழங்குமாறு உலக சுகாதார நிறுவனம் சீனாவிற்கு அறிவித்துள்ளது.

இந்த நிமோனியா நோய் தொற்று வட சீன குழந்தைகளிடையே அதிகமாக பரவி வருவதாகவும், அதனை சீன அதிகாரிகள் மூடி மறைப்பதாகவும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டில் உலகின் முதல் அதிகாரப்பூர்வ கொவிட் நோயாளி சீனாவின் வுஹானில் இருந்து பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles