எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பிலும் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார் என பாராளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதின பேரணி ஏற்பாடுகளைப் பார்வையிட நேற்று மாலை கம்பஹாவுக்கு வருகை தந்திருந்த நிலையிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் வேறு கட்சிகள் முன்னிறுத்தும் எந்தவொரு வேட்பாளருக்கும் சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது.
அதற்குப் பதிலாக எமது கட்சியின் சார்பில் வேட்பாளர் ஒருவரை களமிறக்கி அவரை வெல்ல வைப்பதற்காக நாங்கள் செயற்பட உள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.