NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சத்திர சிகிச்சையின் போது சுயநினைவை இழக்கச் செய்யும் மருந்து பாவனைக்குத் தடை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

சத்திரசிகிச்சைக்கு முன்னர் நோயாளிகளை சுயநினைவை இழக்கச் செய்யப் பயன்படுத்தப்படும் Propofol என்ற தடுப்பூசியின் 100,000க்கும் மேற்பட்ட குப்பிகளின் பாவனையை நிறுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கம்பஹா பொது வைத்தியசாலை உட்பட 5 வைத்தியசாலைகளில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, இந்த தடுப்பூசிகளின் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசிக்குப் பிறகு காய்ச்சல் மற்றும் உடல் வறட்சி போன்ற ஒவ்வாமை எதிர்வினைகள் இருப்பதாக நோயாளிகள் முறைப்பாடு அளித்துள்ளனர்.

நோயாளிகளின் முறைப்பாடுகளை விசாரணை செய்து, தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் இந்த தடுப்பூசியின் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசிகளின் மாதிரிகள் ஆய்வகத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

இந்தியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் இந்த தடுப்பூசியை இறக்குமதி செய்துள்ள நிலையில், தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் நிபுணர்கள் குழுவும் இந்த தடுப்பூசிகளுக்கான பரிந்துரையை வழங்கியுள்ளது.

இந்த குழுவின் பரிந்துரையின்றி மருந்துகளை கொள்முதல் செய்ததாக கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே, குழுவின் பரிந்துரைகளைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Share:

Related Articles