கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் செயற்பாட்டின் பிரதான பங்குதாரர்களில் ஒருவரான இலங்கை துறைமுக அதிகாரசபை, 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சாதனை கொள்கலன் செயற்பாட்டுத் திறனை அடைந்துள்ளது.
கடந்த வருடத்தின் முதல் காலாண்டில் துறைமுக அதிகாரசபையால் கையாளப்பட்ட கொள்கலன்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 41,032 ஆக இருந்ததுடன், இந்த வருடத்தின் முதல் காலாண்டில் அது 6 இலட்சத்து 52,766 ஆக அதிகரித்துள்ளது. இது சதவீத அடிப்படையில் 48 சதவீத அதிகரிப்பாகும்.
மேலும் இலங்கை துறைமுக அதிகாரசபை இந்த வருடத்தின் முதல் 03 மாதங்களில் 5 இலட்சத்து 82,403 கொள்கலன்களை கையாண்டு மீள அனுப்பியுள்ளது.