தமிழகத்தை சூழ்ந்துள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சென்னையில் இருந்து, 150 கி.மீ. தொலைவில் கிழக்கு – தென்கிழக்கில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அதிக அளவிளான கனமழை மற்றும் அதிக வேகத்தில் காற்று வீசி வருகிறது.
தொடர்கின்ற கடும் புயல் மற்றும் மழை காரணமாக வெள்ள அபாய நிலை ஏற்பட்டுள்ளது, தொடருந்து நிலையங்கள், சாலைகள் மற்றும் சென்னை விமான நிலையம் உள்ளிட்டவை வெள்ள நீரால் நிறைந்துள்ளது
இதன் காரணமாக சென்னையில் புறநகர் தொடருந்து சேவைகள் இரத்து செய்யபட்டுள்ளது, அதற்குப்பதிலாக மணித்தியாலத்திற்கு ஒரு முறை என சிறப்பு தொடருந்து சேவை முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், புயல் காரணமாக தமிழகம் முழுவதும் இதுவரை 120 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது