NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சேவையில் இருந்து விலகிய அவிசாவளை – புறக்கோட்டை வழித்தட பஸ்

அவிசாவளை – புறகோட்டை பாதையில் பயணிக்கும் பஸ்கள் (122) சேவையில் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இன்று வியாக்கிழமை காலை முதல் வழித்தட எண் 122இல் உள்ள 60 பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஹோமாகம டிப்போவின் அத்தியட்சகர் மற்றும் அவரது ஊழியர்கள் டிப்போவிற்கு சொந்தமான பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த போது கொடகம பிரதேசத்தில் வைத்து சிலர் தாக்கியுள்ளனர்.

ஆனால், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும், அதற்கு பதிலளிக்கும் வகையில் அவர்கள் பஸ் சேவையை விட்டு விலகி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles