ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகை மூலம் தமிழ் மக்களின் அனைத்து தாகங்களுக்கும் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
தாளையடி கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நீர் தாகத்தினை போன்று எமது மக்கள் பல்வேறு தாகங்களோடு காணப்படுகின்றனர்.
அதாவது, அரசியல் சமவுரிமை பற்றிய தாகம், அபிவிருத்தி ஊடான அழகிய தேசத்தை கட்டியெழுப்பும் தாகம், அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பான தீர்விற்கான தாகம் போன்றவற்றுடன் எமது மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
வீழ்ச்சியில் இருந்து மீட்சியின் எழுச்சி நோக்கி நாட்டு மக்களை வழிநடத்திவரும் வல்லமை கொண்ட ஜனாதிபதியுடன் எதிர்காலத்தில் மக்கள் அணிதிரளும் பட்சத்தில் அனைத்து வகையான தாகங்களுக்கும் நியாயமான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனக் குறிப்பிட்டார்.