NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதியுடன் ஆளுங்கட்சி அவசர சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அவசர சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

குறித்த சந்திப்பானது நேற்று (07) மாலை 5 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்றம் இன்று கூடியுள்ள நிலையில் நேற்று இந்த அவசர சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2024ஆம் நிதி ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பிலும் நேற்றைய சந்திப்பில் பேசப்பட்டது என்று அறியமுடிந்தது.

Share:

Related Articles