(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பாராளுமன்றத்தின் சிறப்புரிமை குழுவிற்கு அழைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி நேற்று பிரதி சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி கடந்த 9ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு வந்து, பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் தலையிட்டு அழுத்தம் கொடுத்தார்.
பாராளுமன்றத்தின் நிதி தெரிவுக்குழுவின் தலைவரை பாராளுமன்றமே நியமிக்கும் என்பதுடன் அதில் ஜனாதிபதி தலையிட முடியாது.
ஜனாதிபதியின் இந்த செயல் மூலம் நாட்டு மக்களின் நிறப்புரிமை மீறப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆவணங்கள் பாராளுமன்றத்தில் சம்பிக்கப்பட்டுள்ளதால், அப்பாவி மக்கள் அதற்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்லும் சந்தர்ப்பம் இல்லாமல் போயுள்ளது. இது மக்களின் சிறப்புரிமையை மீறும் செயல்.
உயர் நீதிமன்றத்தின் சட்டத்தரணிகள் பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அழைக்கப்படுவார்கள் என்றால், ஜனாதிபதியையும் அந்த குழுவிற்கு அழைக்க வேண்டும் எனவும் சந்திம வீரக்கொடி மேலும் தெரிவித்துள்ளார்.