ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்திய அரசாங்கத்தின் பல பலம் வாய்ந்த அமைச்சர்களுடன் ஜனாதிபதி இருதரப்பு பேச்சுக்களை நடாத்தவுள்ளதுடன், இலங்கைக்கு இடையில் முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான வர்த்தக திட்டத்தில் இந்தியாவும் இணைந்துகொள்ளும் என தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, ஜனாதிபதி புத்த கயாவிற்கு விஜயம் செய்யவுள்ளதுடன், ஜனாதிபதியுடன் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதேவேளை, இந்தியப் பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையின்படி, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கைக்கு மிக நெருக்கமான அண்டை நாடாக முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சு ஜனாதிபதியின் இந்திய விஜயம் குறித்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.