(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றிரவு (24) இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
நாளைய தினம் (26) இடம்பெறவுள்ள சர்வக்கட்சி கூட்டம் மற்றும் 13ஆம் திருத்தச் சட்டம் என்பன தொடர்பில் கலந்துரையாடியதாக சி.வி.விக்னேஸ்வரன் எம்.பி தெரிவித்துள்ளார்.