NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்கள்; கட்டுப்பணத்தை இழந்தனர் – தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்!

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பிரதான 3 வேட்பாளர்களை தவிர, ஏனைய 35 வேட்பாளர்களும் கட்டுப்பணத்தை இழந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதியாக தெரிவான அநுரகுமார திஸநாயக்க, இரண்டாம் இடத்தை பெற்ற சஜித் பிரேமதாஸ, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் மாத்திரமே தாம் செலுத்திய கட்டுப்பணத்தை மீளப்பெற முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வரலாற்றில் அதிகளவான வேட்பாளர்கள் 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர்.

இதற்கமைய 39 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்திய நிலையில், அவர்களில் 38 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஊடாக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாவும், சுயேச்சை வேட்பாளர் ஒருவருக்கு 75 ஆயிரம் ரூபாவும் கட்டுப்பணமாக அறவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles