(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (09) விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை பலப்படுத்துவதற்கான அனைத்து யோசனைகளையும் பாராளுமன்றத்தில் முன்வைக்கும் வகையில் ஜனாதிபதி இந்த விசேட அறிக்கையை வெளியிடவுள்ளார்.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை வலுப்படுத்துவது தொடர்பான கட்டளைச்சட்டங்களை கொண்டு வருவது தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கு விளக்கமளிக்கவுள்ளார்.
இந்த அறிக்கையில் பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய அதிகாரங்கள் எவ்வாறு பகிரப்படும் என்பது தொடர்பிலும் ஜனாதிபதி தெளிவுபடுத்தவுள்ளார்.