அமெரிக்காவில் இந்த ஆண்டின் இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான கருத்துக் கணிப்புகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகக் கமலா ஹரிஸும், குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப்வும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்படுவாரென அந்த நாட்டின் பிரபல ஜோதிடர் அறிவித்துள்ளதாக ஆங்கிலப் பத்திரிக்கையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஜோதிடக் கணிப்பின்படி, ட்ரம்பின் தொழில் மற்றும் இலக்குகளில் கணிக்க முடியாத தன்மையைக் காட்டுகிறது என்றும் அவருக்குச் சில புதுவிதமான நிகழ்வுகள் ஏற்படக்கூடும் என்றும் சுட்டிக்காட்டிக்காட்டப்பட்டுள்ளது.