NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் இரட்டைப் பேச்சு சவாலுக்குள்ளாகியுள்ளது!

250க்கும் மேற்பட்ட மனித உயிர்களை இழந்த, நான்கு வருடங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு படுகொலைகள் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்களை செனல் 4 ஆவணப்படம் வெளிப்படுத்திய பின்னர் ஜனாதிபதியும் அவரது அமைச்சும் கூறும் முரண்பாடான கருத்துகள் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இவ்வாறான அறிக்கைகள் மூலம் ஏமாற்றப்படுவது யார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

“இப்போது, இந்த தகவல் வெளியானவுடன், பாதுகாப்பு அமைச்சு பாய்ந்துகொண்டு, இது தொடர்பில் எந்த விசாரணையும் இல்லாமல் இந்த அறிக்கை தவறானது என ஒரு அறிவிப்பை வெளியிட்டது. ஜனாதிபதி இப்போது குழுவை நியமிப்பதாக கூறுகிறார்.  இந்த ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சராக உள்ளார். இது தவறானது என பாதுகாப்பு அமைச்சு ஒருதலைப்பட்சமான அறிவிப்பை வெளியிடுகிறது. ஒரு குழு நியமிக்கப்படும் என ஜனாதிபதி கூறுகிறார். யாரை ஏமாற்றப் பார்க்கின்றார்கள்? இது என்ன கேலி?.”

யுத்த காலத்தில் இராணுவத் தளபதியாக பதவி வகித்த சரத் பொன்சேகா 13 வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினர் நாட்டில் குண்டுகளை வெடிக்கச் செய்ததாக பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என ஆசிரியர் சங்கத் தலைவர் மேலும் கேள்வி எழுப்பினார்.

“சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் இராணுவ அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு 2019 ஆம் ஆண்டு இந்த நாட்டில் குண்டுகள் வெடித்ததாக தெளிவாக கூறியதை நாம் பார்த்தோம். என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? எதுவும் இடம்பெறவில்லை.”

ஆணை இல்லாத அரசாங்கம், ஜனநாயக விரோதப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்திய ஆசிரியர் சங்கத் தலைவர், உயிர்த்த ஞாயிறு தினத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

“உயிர்த்த ஞாயிறு தினத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்நாட்டு மக்களுக்கு நீதி வேண்டும். இந்த அரசாங்கத்தின் ஜனநாயக விரோதத் தன்மை அனைத்து தரப்பிலிருந்தும் அரசாங்கத்திற்கு காட்டப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் காட்டப்படும் போது தான் அரசாங்கம் இவ்வாறு செயற்படுகின்றது. இந்த ஜனநாயக விரோதப் பிரசாரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என நாங்கள் அரசாங்கத்திடம் தெளிவாகச் சொல்கிறோம். அவர்களுக்கு எந்த மக்கள் ஆணையும் இல்லை.”

பாதுகாப்பு அமைச்சின் பதில்

செனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட அண்மைய ஆவணப்படத்திற்கு உறுதியுடனும், அர்ப்பணிப்புடனும் பதிலளிக்க பாதுகாப்பு அமைச்சு விரும்புவதாக தெரிவித்திருந்ததோடு, இந்த ஆவணப்படம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான பொறுப்பை இராணுவப் புலனாய்வு பிரிவு மற்றும் இலங்கையின் தேசிய புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீதும் அப்பட்டமாக மாற்ற முயற்சிக்கிறது.

இந்த குற்றச்சாட்டிற்கு பாதுகாப்பு அமைச்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

“36 ஆண்டுகளாக தேசத்திற்கு சேவையாற்றிய அர்ப்பணிப்புள்ள சிரேஷ்ட இராணுவ அதிகாரிக்கு எதிராக, தாக்குதலை திட்டமிட்டு குண்டுதாரிகளுக்கு உதவியதாக தொடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு வன்மையாக கண்டிக்கிறது.”

இந்த கொடூரமான சோகத்தை நிகழ்த்தியவர்கள் சஹ்ரன் ஹாஷீம் தலைமையிலான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய குழுவைச் சேர்ந்தவர்கள் என பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுநாள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட ஜனாதிபதி, “2019 உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக உண்மையைக் கண்டறிந்து நீதி வழங்குவதற்கு ஒரு நேர்மறையான நடவடிக்கையை எடுப்பதற்கும்.” செனல் 4 குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யவும், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவொன்றை நியமிக்க எடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்டதாக முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணை நடத்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் அரசியல் அதிகாரங்கள் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரியின் தலையீடு இருப்பதாகக் குற்றம் சாட்டும் செனல் 4 அறிக்கையை “எரியும் நெருப்பில் வைக்கோல் போடுவது போன்ற நிலைமை” என ஜனாதிபதி அலுவலகம் வர்ணித்துள்ளது.

ReplyReply allForward
Share:

Related Articles