எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் சுயாதீன வேட்பாளராக களமிறங்கவுள்ளார்.
மலையக அரசியல் அரங்கத்தின் உயர்மட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திலகராஜ் சுயாதீன வேட்பாளராக பங்கு பெறுவதற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 27 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.
இன்று கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களில் இருவர் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஒருவர் சுயேச்சை வேட்பாளர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு இதுவரை பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களில் 14 பேர் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், 13 சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட பதிவு செய்துள்ளனர்.