தென் அமெரிக்க நாடான ஈகுவடோரில் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதில் 8 பேர் போட்டியிடுவதுடன் அவர்களில் பெர்னாண்டோ வில்லிவிசென்சியோவும் ஒருவர் ஆவார்.
ஜனாதிபதித் தேர்தலில் களம் இறங்கிய பெர்னாண்டோ, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், தலைநகர் குயிட்டோவில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று உரையாற்றிய போது, ஒருவர் பெர்னாண்டோவை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து குற்றவாளியை கைது செய்யக் கோரி அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், ஈகுவடோரில் ஜனாதிபதி கில்லர்மோ லாஸ்சோ கூறுகையில், சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்பமுடியாது. திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும். இதற்காக நாடு முழுவதும் 60 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.