NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜப்பானிய கடல்சார் தற்பாதுகாப்புப்படை கப்பல்கள் இலங்கையை வந்தடைந்தன!

புங்கோ மற்றும் எராஜிமா ஆகிய ஜப்பானிய கடல்சார் தற்பாதுகாப்புப் படை கப்பல்கள் இன்று நல்லெண்ணப் பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

141 மீட்டர் நீளமுள்ள JASDF புங்கோ என்ற கப்பல், கண்ணிவெடி அகற்றும் கப்பலாகும் , மேலும் இந்தக் கப்பலில் 125 பேர் கொண்ட குழுவினர் பணியாற்றுகின்றனர்.

65 மீட்டர் நீளமுள்ள கண்ணிவெடி அகற்றும் கப்பலான JASDF புங்கோ, 54 பேர் கொண்ட குழுவினருடன் தற்போது செயற்ட்படுகிறது.

இந்த கப்பல்கள் இரண்டும், கொழும்பில் நங்கூரமிட்டிருக்கும் போது,
அவற்றின் பணியாளர்கள் கொழும்பு நகர சுற்றுலா தலங்களுக்கு பயணம் செய்வர்.

இந்தநிலையில் கப்பல்கள் இரண்டும் ஏப்ரல் 04 ஆம் திகதியன்று கொழும்பிலிருந்து புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

Share:

Related Articles