(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
எதிர்வரும் ஜுலை மாதம் 9ஆம் திகதி முதல் தேர்தலுக்கான போராட்டத்தை ஆரம்பிக்கப் போவதாகவும் இந்த போராட்டத்தின் இறுதியில் கொழும்பு சுற்றிவளைக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பலப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாட்டை இதுவரை அழிவுப் பாதையில் இருந்து மீட்டெடுப்பதற்காக கடந்த மார்ச் 9ஆம் திகதி வாக்களிப்பதற்காக மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஆட்சியாளர்கள் அதற்கு இடமளிக்காது தங்களுக்குள்ளேயே ரணில், ராஜபக்ஷ, சஜித் என அதிகாரங்களை மாற்றிக் கொள்ள முயற்சிக்கின்றனர்.
எதிர்வரும் ஜுலை மாதம் 9ஆம் திகதி முதல் தேர்தலுக்கான போராட்டத்தை ஆரம்பிக்கப் போவதுடன், இந்த போராட்டத்தின் இறுதியில் கொழும்பு சுற்றிவளைக்கப்படும் எனவும் அவர் அநுர எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.