NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜூனியர் உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை!

ஜூனியர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் (19 வயதுக்கு உட்பட்டோர்) போட்டி அமெரிக்காவில் உள்ள பப்ளோ நகரில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் 75 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை கிரிஷா வர்மா 5-0 என்ற கணக்கில் ஜெர்மனியின் சிமோன் லிரிகாவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளார்.

மேலும் இந்திய வீராங்கனைகள் சன்சல் சவுத்ரி (48 கிலோ), அஞ்சலி குமாரி சிங் (57 கிலோ), வினி ( 60 கிலோ), அகன்ஷ் பலாஸ்வால் (70 கிலோ) ஆகியோர் தங்களது இறுதிப்போட்டியில் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்தை பெற்றுள்ளனர்.

இதேவேளை, ஆண்களுக்கான 75 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ராகுல் குண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார்.v

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles