எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி முதல் உள்ளூர் பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலையை குறைக்க உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதன்படி, 10 சதவீதம் வரை விலையில் திருத்தம் செய்ய இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டொலரின் பெறுமதி வீழ்ச்சியுடன் ஒப்பிடும் போது மூலப்பொருட்களின் விலை வீழ்ச்சியின் பயனை நுகர்வோருக்கு வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, உள்ளூர் பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலை 350 முதல் 450 ரூபா வரை குறைக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சந்தை நிலவரங்கள் மற்றும் டொலரின் விலைக்கு ஏற்ப மேலும் விலை குறைப்பு தொடர்பில் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.