மக்கள் நம்பிக்கையை வெற்றி கொண்ட ஒருவரையே பொதுஜன பெரமுனுவின் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வோம் எனவும், கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற ரீதியில் தனக்கு பாரிய பொறுப்பு உள்ளது எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டின் இறைமை கலாசாரம் நாட்டு மக்களை பாதுகாக்கும் வேலைத்திட்டங்களுடன் முன்னோக்கி செல்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நாம் பேருந்துகளுக்கு தீவைக்கவோ, அல்லது அப்பாவி மக்கள், பௌத்த மதகுருமார் மீதோ தாக்குதல் மேற்கொள்ளவில்லை.
எனவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் தேசியமக்கள் சக்திக்கும் பாரிய வித்தியாசம் கிடையாது என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இவ்வாறான செயற்பாடுகளால் நாம் இந்த நாட்டை வீணடிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களே நாட்டிற்கு தற்போது தேவைப்படுகின்றது. பொறுப்பு வாய்ந்த அரசியல்வாதிகள் என்ற ரீதியில் பொதுஜன பெரமுன சார்பில் பொருத்தமான ஒரு வேட்பாளரை நாம் தெரிவு செய்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.
கட்சியை மறுசீரமைத்து தேர்தலில் பொதுஜன பெரமுனவை வெற்றியடையச் செய்வதே எமது எதிர்பார்ப்பாகும்.
எனவே கட்சியை கட்டியெழுப்பவுதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையினையே முன்னெடுத்துள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.