(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் 16ஆவது தலைமை ஆசிரியராக ரே ஜெயவர்தன தெரிவாகியுள்ளார்.
இவர், 2018 ஆம் ஆண்டு முதல் மாணவர் அனுபவத்தை மேம்படுத்துதல் மற்றும் 130 புதிய ஆசிரிய உறுப்பினர்களை ஆட்சேர்ப்பு செய்தல் ஆகிய பல்கலைக்கழக செயற்பாடுகளில் தனித்து விளங்கினார்.
இவரின் நியமனத்திற்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாக சபையின் செயற்குழு கடந்த வாரம் அனுமதி வழங்கியpருந்தது.
அதற்கமைய ஜோன்ஸ் ஹொப்கின்ஸில் அவர் ஒக்டோபர் 15ஆம் திகதி அன்று தனது பதவியை பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.