NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு நபர் ஒருவர் பலி

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஏ9 வீதியில் கைதடி – நுணாவில் பகுதியில் டிப்பருடன் மோதுண்டு இளம் குடும்பஸ்தரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் குருணாகலையை சேர்ந்த 34 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்து சம்பவம் இன்று (12) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்துடன் வீதியில் நடந்து பயணித்த குடும்பஸ்தர் மோதுண்டு உயிரிழந்தள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles