NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய அரச நிறுவனங்களில் விசேட குழு நியமனம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

டெங்கு நுளம்பு பரவும் அபாயம் அதிகம் உள்ள இடமாக அரச நிறுவனங்களின் வளாகங்கள் கண்டறியப்பட்டுள்ளதால், ஒவ்வொரு அரச நிறுவனங்களிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்றை உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சின் செயலாளர் கே.டி.என் ரஞ்சித் அஷோக தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து உரிய நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, டெங்கு நுளம்பு பரவும் அபாயம் அதிகம் உள்ள இடமாக அரச நிறுவன வளாகங்களை அடையாளப்படுத்தி வெள்ளிக்கிழமை ‘அரச நிறுவனங்களில் டெங்கு தடுப்பு தினமாக’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், அன்றைய தினம், அனைத்து ஊழியர்களின் பங்களிப்புடன், றுளம்பு குடம்பிகள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து, காலை, 9.00 மணி முதல், 10.00 மணி வரை, ஒரு மணி நேரம் சுத்தம் செய்ய வேண்டும் எனவும், குழுவின் செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையை ஒவ்வொரு அரச நிறுவனமும் வட்டார சுகாதார வைத்திய அதிகாரிக்கு மாதந்தோறும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பணிப்புரை விடுத்துள்ளார்.

Share:

Related Articles