NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் அபாயம்!

நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கலாம் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் 63,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

டெங்குவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.

மேல் மாகாணத்தில் 30,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இவ்வருடம் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களில் 20 வீதமானோர் பாடசாலை மாணவர்களாவர்.

அதன்படி, சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்கவும், வாரம் ஒருமுறையாவது துப்புரவு பணிகளை மேற்கொள்ளவும் பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக அண்மைய நாட்களாக பெய்துவரும் மழையினால் பாடசாலை வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு வலியுறுத்தியுள்ளது.

அண்மைக்கால வறட்சி காரணமாக நாளாந்தம் 100 முதல் 125 பேர் வரை பாதிக்கப்பட்டதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அதிகமாக பெய்யும் மழையினால் கொசு உற்பத்திக்கு சாதகமான சூழலை உருவாக்கும் என்றும், அதனால் நோயாளர்கள் மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles