(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் புதிய தலைமை நிதி அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைபவ் தனேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
உலக அளவில் இந்தியர்களின் ஆதிக்கம் பெருகிவருவது பெருமை தரும் விஷயமாகும்.
உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமானது டெஸ்லா நிறுவனம், மின்சார கார் உற்பத்தி மற்றும் சோலார் எரிசக்தி உபகரணங்கள் தயாரித்து சந்தையில் உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிறுவனத்தின் தலைமை நிதி nதிகாரியாக கடந்த 13 ஆண்டுகளாக ஜசாரி கிர்க்ஹார்ன் பணியாற்றி வந்தார். அந்த பதவியில் இருந்து பதவி விலகுவதாக கிர்க்ஹார்ன் விலகினார். ஆநடத பதவிக்கு வைபவ் தனேஜா நியமிக்கப்பட்டுள்ளார். 45 வயதான தனேஜா, டெஸ்லா நிறுவனத்தின் தலைமை கணக்கியல் அதிகாரி 2019ஆம் ஆண்டு முதல் பணியாற்றினார்.
டில்லி பல்கலையில் பட்டம் பெற்றவரான வைபவ் தனேஜா, 1999 முதல் 2016 வரை இந்தியா, அமெரிக்காவில் உள்ள பிரைஸ் வோட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார். பிறகு, 2016 மார்ச் முதல், சோலார் பேனல் தயாரிக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த சோலார்சிட்டி நிறுவனத்தில் இணைந்தார். இந்த நிறுவனத்தை டெஸ்லா நிறுவனம் வாங்கியது. பிறகு 2017இல் வைபவ் தனேஜா டெஸ்லாவில் இணைந்தார்.