NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டைட்டானிக் கப்பலில் வழங்கப்பட்ட இரவு உணவு பட்டியல் ஏலத்தில்..

அனர்த்தத்திற்கு முன்னர் டைட்டானிக் கப்பலில் முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட இரவு உணவு பட்டியல் ஏலம் விடப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கப்பலில் பயணம் செய்த கனேடிய வரலாற்றாசிரியர் லென் ஸ்டீவன்சன், டைட்டானிக் கப்பலில் முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவு பட்டியலை வைத்திருந்தார் என்று ஏலதாரர் ஆண்ட்ரூ ஆல்ட்ரிட்ஜ் தெரிவித்தார்.

2017 ஆம் ஆண்டு அவர் இறந்த பிறகு, அவரது மகளும் மருமகளும் அவரது பொருட்களை பராமரித்து வந்துள்ளதாகவும், அதன் பிறகு டைட்டானிக் கப்பலில் பரிமாறப்பட்ட உணவுகளின் பட்டியலை கண்டுபிடித்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

ஏலதாரர் 70,000 பவுண் அல்லது 86,000 டொலர்களுக்கு விற்பனை செய்ய எதிர்பார்க்கிறார்.

Share:

Related Articles