NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தங்கம் வெல்லுமா இலங்கை மகளிர் அணி…!

2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகளில் மகளிருக்கான கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இலங்கை மகளிர் மற்றும் இந்திய மகளிர் அணிகள் மோதவுள்ள இப்போட்டி இலங்கை நேரப்படி, முற்பகல் 11.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் வனிந்து ஹசரங்க பங்கேற்பது நிச்சயமற்றதாக காணப்படுகிறது.

எல். பி. எல் போட்டியின் போது காலில் உபாதைக்கு உள்ளான வனிந்து ஹசரங்கவுக்கு ஆசியக் கிண்ண போட்டியில் இணைவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில், பயிற்சி ஆரம்பித்த பின்னர் வனிந்து ஹசரங்க மீண்டும் காயம் அடைந்துள்ளார்.

எனவே, வைத்திய அறிக்கையின்படி அவரால் உலகக் கிண்ண போட்டியில் விளையாட முடியாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணி இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதுடன், அந்த அணி நாளை இந்தியா பயணமாகவுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles