NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தங்க அகழ்வில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடி இடமாற்றம்!

புத்தளம் – ஆனமடுவ பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கத்தை தேடி அகழ்வு பணியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பிரதான பொலிஸ் பரிசோதகர் உட்பட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தின் கீழ் உள்ள குற்ற விசாரணை பிரிவில் கடமையாற்றும் அந்த பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட நால்வரே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தென்னகோன் ராஜபக்‌ஷ கொஸ்வத்த பொலிஸ் நிலையத்திற்கும், பொலிஸ் சார்ஜன்ட் பஸ்னாயக்க கற்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கும், பொலிஸ் கான்ஸ்டபிள் அபேசிங்க தொடுவாவ பொலிஸ் நிலையத்திற்கும், பொலிஸ் கான்ஸ்டபிள் சேனநாயக்க ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

ஸ்கேனர் இயந்திரம் ஒன்றை பயன்படுத்தி தங்கத்தை தேடி அகழ்வு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Share:

Related Articles