மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான தஜிகிஸ்தானில் பெண்கள் ஹிஜாப் அணிதல் மற்றும் முக்கிய பண்டிகைகளை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளமையாது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய ஆசிய நாடுகளில் தஜிகிஸ்தான் ஒரு முக்கிய இஸ்லாமிய நாடாகும். இந்நாட்டில் இஸ்லாமிய விழுமியங்கள் முறையாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
குறித்த தடையை மீறி பெண்கள் ஹிஜாப் அணிந்தால் இலங்கை மதிப்பீட்டின் படி, 18 இலட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அரசால் கொண்டுவரப்படும் புதிய சட்டங்களை மீறும் பட்சத்தில் அரச அதிகாரிகளுக்கு 10 இலட்சமும் மத தலைவர்களுக்கு 18 இலட்சமும் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஜிகிஸ்தானில் 1 கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நாட்டில் 96 சதவீதம் இஸ்லாமியர்கள் வசித்துவரும் நிலையில், பாடசாலைகள், பல்கலைக் கழங்கள், அரசாங்க அதிகாரிகளுக்கு புர்கா மற்றும் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.