NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தண்ணீர் நிரம்பிய பேசினில் விழுந்து 11 மாத குழந்தை உயிரிழப்பு..!

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் தண்ணீர் நிரம்பிய பேசினில் விழுந்து 11 மாத சிசு ஒன்று நேற்று (22) உயிரிழந்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏ.துஷிகா என்ற சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் சம்பவத்தன்று தாயார் சிசுவை குளிப்பாட்டிய பின்னர் தண்ணீர் பேசினுக்கருகில்; விட்டுவிட்டு வீட்டுக்குள் சென்று மீண்டும் வந்து பார்த்தபோது பேசினில் விழுந்து சிசு மிதப்பதைக் கண்ட தாய், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போதே உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பக்கட்ட பொலிஸ்; விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share:

Related Articles