NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தனக்கு தானே தீ வைத்துக்கொண்ட சாரதி – பண்டாரகமவில் சம்பவம்!

முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டு முச்சக்கரவண்டிக்கும் தீ வைத்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரகம ஹத்தாகொட பிரதேசத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை, தற்போது ஹொரணை ஆரம்ப வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குடும்பத் தகராறு காரணமாக இவ்வாறு தனக்குத்தானே தீ வைத்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த நபரின் உடல் மோசமாக எரிந்துள்ளதாகவும் முச்சக்கரவண்டியும் தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு பாணந்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தியுள்ள நிலையில், பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles