தமிழக வெற்றிக் கழகத்தில் 120 மாவட்ட செயலாளர்களை அறிவித்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
நிர்வாக வசதிக்காக தமிழக வெற்றிக் கழகம் 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளர், இணை செயலாளர், பொருளாளர் என 15 பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
அதன்படி முதற்கட்டமாக 19 மாவட்ட செயலாளர்கள் கடந்த 24ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டதுடன், தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு தனது உருவம் பொறித்த வெள்ளி நாணயத்தை விஜய் பரிசாக வழங்கியிருந்தார்.
அதனை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் கடந்த 29ஆம் திகதி வெளியிடப்பட்டதுடன், 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 3ஆம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதுடன், இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் மூன்றாம் கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் எனவும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.