NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட புகையிரத சேவை திட்டம்..!

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் விசேட புகையிரத சேவையை இயக்க புகையிரதவே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

இந்த விசேட புகையிரத சேவை இரண்டு கட்டங்களாக இயக்கப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் கொழும்பிலிருந்து பதுளை அனுராதபுரம் காலி கண்டி மற்றும் பெலியத்த ஆகிய பகுதிகளுக்கு விசேட புகையிரதங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புத்தாண்டு நிறைவடைந்து கொழும்பு திரும்பும் மக்களுக்காக எதிர்வரும் 18, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விசேட புகையிரத சேவைகள் இயக்கப்படும் என புகையிரதவே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles