NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தரக்குறைவான அரிசி வழங்கப்பட்டமை தொடர்பில் சஜித் பிரேமதாச பாராளுமன்றில் கேள்வி !

நாட்டின் சில பகுதிகளுக்கு வழங்கப்பட்ட தரக்குறைவான அரிசி தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகி கருத்து வெளியிடும் போதே எதிர் கட்சி தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசு ஏப்ரல் முதல் அரிசி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டத்தை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால் தேர்வு நடைமுறையில் கடுமையான சிக்கல்கள் உள்ளன.

சில இடங்களில் தரமற்ற அரிசி விநியோகம் நடக்கிறது. அவ்வாறானதொரு சம்பவம் ஹாலிஎல பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் கடமையாற்றும் ராஜித கீர்த்தி தென்னகோன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி விசாரணை நடத்த வேண்டுகிறேன்… விநியோகிக்கப்படும் அரிசியின் தரத்தை பராமரிக்க வேண்டும். ஏனெனில் இவை நம் நாட்டு மக்களுக்கு கொடுக்கப்பட்டவை. அதைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும்”

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles