NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தலவாக்கலை – கிறேட்வெஸ்டன் வனப்பகுதியிலிருந்து பெண்ணொருர் சடலமாக மீட்பு..!

தலவாக்கலை – கிறேட்வெஸ்டன் வனப்பகுதியிலிருந்து நேற்று மாலை பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லையென தலவாக்கலை பொலிஸார் குறிப்பிட்டுள்ளதுடன், உயிரிழந்தவர், கிறேட்வெஸ்டன் பகுதிக்கு சுற்றுலா சென்ற உள்நாட்டு சுற்றுலா பயணிகளில் ஒருவராக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் மரணத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles