NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தலையில் தேங்காய் விழுந்து சிசு பலி..!

கண்டி, கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை நாராங்ஹின்ன தோட்டத்தில், 11 மாத குழந்தையின் தலையில் தேங்காய் விழுந்ததில் அக்குழந்தை உயிரிழந்துள்ளது.

லோகேஸ்வரன் கியாஸ்சினி என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குழந்தையை தந்தை தூக்கி செல்லும்போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த குழந்தையின் தலை பகுதியில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் தெல்தோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின் அங்கு இருந்து உடனடியாக பேராதெனிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.

குழந்தை அங்கு சிகிச்சைபெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. மேலதிக விசாரணைகளை கலஹா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles