கம்பஹா – திவுலப்பிட்டிய பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் தனது மகனால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (21)மாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த 52 வயதுடைய குடும்பப் பெண்ணை அவரின் மூத்த மகனே கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்துள்ளார்.
சந்தேகநபரான 27 வயதுடைய மகனைக் கைது செய்துள்ள பொலிஸார், அவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.