NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

திரிபோஷாவில் இரட்டிப்பாக்கவுள்ள இரசாயனங்கள்!

குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு போஷாக்கு உணவாக வழங்கப்படும் திரிபோஷாவில் உள்ள இரசாயனங்களை இரட்டிப்பாக்க அரசு முடிவு செய்துள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதன் பிரகாரம் திரிபோஷ உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சோளத்தில் இருக்கக்கூடிய ‘அப்லடொக்சின்’ அளவை இரட்டிப்பாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானத்தின்படி, திரிபோஷாவில் உள்ள ‘அப்லடொக்சின்’ , இதுவரை ஒரு பில்லியன் சோளத்துக்கு 5 என்ற அளவுத்திட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அதனை 10ஆக அதிகரிக்கப்படும்.

‘அஃப்லடொக்சின்’ என்ற வேதிப்பொருளை உட்கொள்வதால் கல்லீரல் பாதிக்கப்படும். இந்த இரசாயனம் புற்றுநோயை ஏற்படுத்தும். இதேபோல தேங்காய் எண்ணெய் மற்றும் திரவ பாலில் அஃப்லடொக்சின் இருப்பது குறித்து முன்பு நாட்டில் பெரும் சர்ச்சை எழுந்தமை குறிப்பிடத்தக்கது. 

அமைச்சரவை தீர்மானத்துடன் 1980 ஆம் ஆண்டு 26 ஆம் இலக்க உணவுச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளதுடன், குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு அது ஆபத்தாகவும் அமையலாம் – என புபுது ஜயகொட தெரிவித்தார்.

Share:

Related Articles