NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

திருமணம் செய்து 7 மாதங்களில் இளம் குடும்பப் பெண் கொலை – சிக்கிய கணவன் 

முல்லைத்தீவு –  முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பூதன் வயல் கிராமத்தில் இளம் குடும்ப பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர் மற்றும் இருபெண்கள் உள்ளிட்ட மூவரை முள்ளியவளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பூதன் வயல் கிராமத்தினை சேர்ந்த இளைஞனை வவுனியா ஆச்சிகுளம் பகுதியினை சேர்ந்த 23 வயதுடைய இளம்  பெண் திருமணம் செய்து 7 மாதங்களாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கிணற்றில் குறித்த பெண் விழுந்து இறந்துள்ளதாக முறைப்பாடு செய்வதற்காக கணவன் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.

இதன்போது பொலிஸார் வருகை தரமுன்னர் அயலவர்கள் கிணற்றில் விழுந்த பெண்ணை மீட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர்.

இருப்பினும், பெண் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ள நிலையில் நேற்று  சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசேதனைக்கு உட்படுத்தப்பட்டபோது குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதான சந்தேகம் எழுந்துள்ளது.

இதனையடுத்து முள்ளியவளை பொலிஸாரால் உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் கணவருடன் வாழ்ந்துவந்த நெடுங்கேணியினை சேர்ந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவரையும் கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Share:

Related Articles