NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

திருமண விழாவில் உணவு உண்ட இருவர் உயிரிழப்பு!

இந்தியா – கடலூர் அருகே உள்ள குள்ளஞ்சாவடி என்ற இடத்திலுள்ள திருமண மண்டபத்தில் கடந்த 03ஆம் திகதி திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது.

குறித்த திருமண விழாவில் பரிமாறப்பட்ட காலை உணவை உண்ட இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உணவு உண்டவர்களில் சுமார் 20க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்திஇ வயிற்றுப்போக்கு ஏற்பட அனைவரும் புலியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இவர்களில் ஒரு சிலர் மேலதிக சிகிச்சைக்காக கடலூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் புதுச்சேரி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயதான ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதோடுஇ 55 வயதான மற்றைய நபர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

ஏனையவர்களுக்கு தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

குறித்த மரணங்கள் தொடர்பான விசாரணைகளை குள்ளஞ்சாவடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு முன்பும் உத்தர பிரதேச மாநிலத்தில் அம்பேத்கர் நகரில் நடைபெற்ற திருமண விருந்தில் உணவுண்ட 70 பேர் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles