NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தீபாவளியை முன்னிட்டு கனடாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள முத்திரை!

எதிர்வரும் தீபாவளி பண்டிகையை அடிப்படையாகக் கொண்டு கனேடிய தபால் திணைக்களத்தினால் புதிய தபால் முத்திரையொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடவுள் தீய சக்திகளை அழித்து ஒளி பரப்பிய நாளாக இந்த பண்டிகை கருதப்படுகின்றது.

இந்த நிலையில் எதிர்வரும் 12ஆம் திகதி கொண்டாடப்பட உள்ள தீபாவளியை முன்னிட்டு இந்த புதிய தபால் முத்திரை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தபால் முத்திரைகளை இணையவழியிலும்இ தபால் நிலையங்களிலும் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி மரபுகளையும் கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த தபால் முத்திரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும்இ இந்த தபால் முத்திரையை கிறிஸ்டின் டோ என்பவர் வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles