கொழும்பு துறைமுக நகரம் என்பது கொழும்பில் அமைந்துள்ள ஒரு சிறப்பு பொருளாதார வலயம் மற்றும் சர்வதேச நிதி மையமாகும்.
இது கொழும்பின் மத்தியல் அமையபோகும் வர்த்தக மையம் என்பதுடன், இலங்கை வரைப்படத்தில் இணையப்போகும் புதிய நகரமாகும்.கடலில் மணலை நிரப்பி உருவாக்கப்பட்டுள்ள இந்த நகரம் 269 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டது.
கொழும்பு துறைமுக நகரத்தில் தெற்காசியாவின் சொகுசான குடியிருப்புகளும், வைத்தியசாலைகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் உருவாக்கப்படவுள்ளதுடன், தெற்காசியாவின் வர்த்தக மையமாகவும்
இலங்கையின் நிதி மாவட்டமாக இதனை கருத திட்டமிடப்பட்டுள்ளதுடன், Financial District, Central Park, Island Living, The Marina and International Island ஆகிய ஐந்து கட்டமைப்பின் கீழ் இந்நகரம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
நகரத்தின் கட்டுமானப் பணிகள் மிகவேகமாக இடம்பெற்று வருவதுடன், 2025ஆம் ஆண்டின் இறுதியில் நகரத்தை திறப்பதற்கான எதிர்பார்ப்பிலும் அரசாங்கம் உள்ளது.
இந்நிலையில், நகரத்தில் தற்போதைய நிலையை வெளிகாட்டும் வகையில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. நகரத்தின் பிரமாண்டத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த புகைப்படங்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.