NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

துருக்கியில் டெஸ்லா தொழிற்சாலை ?

துருக்கி ஜனாதிபதி எர்டோகன் அமெரிக்கா சென்றிருந்தபோது எலான் மஸ்க்-ஐ சந்தித்துள்ளார்.

துருக்கியில் எலெக்ட்ரிக் கார் தயாரிக்கும் டெஸ்லா தொழிற்சாலையை தொடங்குவது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக, துருக்கியின் ஜனாதிபதி அலுவலகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“ஏ.ஐ., ஸ்டார்லிங், ஸ்பேஸ் எக்ஸ்-ன் செயற்கைக்கோள் இணையதள சேவை ஆகியவற்றில் ஒத்துழைப்பை வரவேற்பதாக எலான் மஸ்க் இடம் எர்டோகன் தெரிவித்தார்” என எர்டோகன் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தையின்போது எலான் மஸ்க் தனது மகனை கையில் வைத்திருந்தது போன்ற படங்கள் வெளியாகியுள்ளன.

டெஸ்லாவின் முதலீட்டிற்கான மிகவும் முக்கியமான நாடுகளில் துருக்கியும் ஒன்று என மஸ்க் தெரிவித்ததாக, துருக்கி தொழில்துறை மற்றும் டெக்னாலாஜி அமைச்சர் மெஹ்மெட் ஃபதிக் கசிர் தெரிவித்துள்ளார். இருவரும் துருக்கியின் ஆயுதமேந்திய வான்வழி டிரோன் திட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தினர் எனக் கூறினார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles