NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சுக்கு சிவப்பு அறிவித்தல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கொழும்பு – கோட்டை உலக வர்த்தக நிலையத்தின் இருபத்தைந்தாவது மாடியில் நிறுவப்பட்டுள்ள துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை இராஜாங்க அமைச்சின் மின் கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால், சிவப்பு அறிவிப்புடன் 80 இலட்சம் மின் கட்டணம் பெறப்பட்டுள்ளது.

மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் என தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்துள்ளார்.

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு அறிவித்த போதிலும் இதுவரை பணம் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டெம்பர் மாதம் தான் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த இடத்திற்கு வந்ததாகவும், கொழும்பு துறைமுகத்தை அண்மித்த இடத்தில் அமைச்சை நடத்துவதாக கூறியதாகவும், அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

Share:

Related Articles