(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
தென் அமெரிக்க மாநிலமான டெக்சாஸில் சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியதில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பத்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வடக்கு டெக்சாஸில் உள்ள மோட்லி கவுண்டியின் முக்கிய நகரமாக கருதப்படும் மட்டாடர் நகரில் 600 மக்கள் தொகை கொண்டுள்ளது. மட்டாடர் மேற்கு பகுதியில் சூறாவளியால் கட்டடங்கள் பலவும் கடுமையாக சேதமடைந்துள்ளன.
டெக்சாஸில் நேற்று முன்தினம் (21) குறைந்தது நான்கு சூறாவளிகள் பதிவாகியுள்ளன. மழை மற்றும் பலத்த காற்று மாநிலத்தின் சில நகரங்களையும் தாக்கியது குறிப்பிடத்தக்கது.