தென் மாணானத்தின் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில மணித்தியாலங்களில் இரு வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இதன்படி, ஹம்பாந்தோட்டை தங்காலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தங்காலை, குடாவெல்ல – நாகுலுகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதனையடுத்து ஒரு சில மணித்தியாலங்களில், மாத்தறை – திக்வெல்ல பிரதேசத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திக்வெல்ல – போதரகந்த பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு நிலையில் சந்தேக நபர்களைத் தேடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.